அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கல சக்கர நாற்காலி
1/22/2022 12:07:10 AM
அரியலூர், ஜன.22: அரியலூர் மாவட்ட கலெக்டர், அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.99 லட்சம் மதிப்பீட்டில் மின்கல சக்கர நாற்காலிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஏற்றம் பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.99,999 வீதம் ரூ.8,99,991 மதிப்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மின்கல சக்கர நாற்காலிகளை வழங்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், திருமண உதவித்தொகை, காதொலிக்கருவிகள், பிரெய்லி கருவிகள், உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து, பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
நாச்சாரம்மன் கோயில் தேரோட்டம்
பாடாலூர் மேற்கு கிராமத்தில் பொது பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
ஜெயங்கொண்டத்தில் தனியார் பள்ளி முன்புறம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் 79 பயனாளிகளுக்கு ரூ.34.66 லட்சத்தில் நலத்திட்ட உதவி
தா.பழூர் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை கண்டறிய 200 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!