கார் மீது பைக் மோதி 3 பேர் காயம்
1/22/2022 12:05:49 AM
குளித்தலை, ஜன.22: திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா தாத்தையங்கார்பேட்டை அடுத்த பில்லாதுறை பகுதியை சேர்ந்தவர் வேம்படி மகன் வேல்முருகன் (39). இவர் கடந்த 18ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் தனது மனைவி, மகளுடன் வீரப்பூர் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது மயிலாடி இரட்டை வாய்க்கால் பாலம் அருகே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்தபோது அவருக்கு முன்னால் சென்ற ஓம்னி கார் திடீரென பிரேக் போட்டதால் கார் பின்னால் பைக் மோதியதில் வேல்முருகன் மற்றும் மனைவி கோமலேஸ்வரி (34), பிரித்தினா (8) ஆகிய மூன்று பேருக்கும் காயம் அடைந்து. திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு
தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி
கரூரில் முதன்முறையாக துவக்கம்; கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி
கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 வார விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் 1041 பள்ளிகள் திறப்பு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!