ரயிலில் கடத்தி வந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
1/22/2022 12:05:27 AM
திருவள்ளூர்: : ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக குற்றப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைபொருள் நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ராஜகோபால் மேற்பார்வையில் காஞ்சிபுரம் போதைப்பொருள் கடத்தல் பிரிவு துணை கண்காணிப்பாளர் டில்லிபாபு மற்றும் போலீசார் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த 3 பேரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் பையை சோதனை செய்தபோது அதில் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை கைது செய்தனர். விசாரணையில், ஒடிசாவை சேர்ந்த பத்மனாபோயி, தனஞ்ஜெய கரியா, ஹரி ஹர பாகா என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதிகளான தர்மபுரி, திருப்பூர், பெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் நூலகம்
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
புறநகர் மின்சார ரயில்களில் கைவரிசை: செல்போன் திருடிய 2 பேர் பிடிபட்டனர்
புதர்மண்டி பயன்பாடில்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமான திருவாலங்காடு உழவர் சந்தை
பொன்னேரி அருகே ரூ.80 லட்சம் மதிப்பு அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் அதிரடி
செங்குன்றத்தில் பயங்கரம்: முன்விரோத தகராறில் ரவுடி வெட்டி கொலை: 2 பேர் கைது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!