காஞ்சி கிருஷ்ணா கல்லூரியில் தமிழ் துறை கருத்தரங்கம்
1/22/2022 12:04:20 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி, காஞ்சி கிருஷ்ணா கலை கல்லூரி தமிழ்த்துறை சார்பில் “திருக்குறளும் வாழ்வியலும்” கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி நிறுவனர் பா.போஸ் தலைமையேற்றார். கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை தாளாளர் டாக்டர் அ.அரங்கநாதன், தலைவர் கே.வீரராகவன், செயலாளர் வி.மோகனரங்கம், பொருளாளர் எம்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், தமிழ்த்துறைத் தலைவர் வ.வீரராகவன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கு.வெங்கடேசன், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் திருக்குறள் சி.வெற்றிவேல் “திருக்குறளும் வாழ்வியலும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.மேலும் திருக்குறளில் ஆரம்ப வார்த்தை, முடிவுச்சொல் எந்த அதிகாரத்தில் இருந்து குறட்பாவை கேட்பினும் சரியான குறட்பாக்களை கூறி மாணவ, மாணவிகளை வியப்பில் ஆழ்த்தினார். துணை முதல்வர் பிரகாஷ், துறைப் பேராசிரியர்கள் சரளா, பாபுகாந்தி, தியாகு, பாரதிதாசன், பப்பிதா, ஆறுமுகம், சுஜி, உதவி பேராசிரியர் கார்த்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி போராசிரியர் கார்த்திகா நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
தேவாத்தூர் ஊராட்சியில் சுற்று சுவர் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளி; குளம் அருகில் இருப்பதால் பெற்றோர் அச்சம்: அசம்பாவிதம் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குன்றத்தூரில் ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 பவுன் நகைகளை விட்டுச்சென்ற பெண்: கண்டுபிடித்து கொடுத்த காவலாளிக்கு பாராட்டு
வனத்துறை சார்பில் இன்று கருத்து கேட்பு கூட்டம்
கருங்குழியில் 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணி: விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கேளம்பாக்கம் அருகே ரூ.35 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு
வாடகை கார் டிரைவர் கொலை வழக்கில் 2வது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனை முற்றுகை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!