சாலையில் வீசப்பட்ட காலாவதி மாத்திரைகள்: கண்டு கொள்ளாத சுகாதாரத்துறையினர்
1/22/2022 12:04:09 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு கோதண்டராமர் கோயில் தெருவில் 100க்கு மேற்பட்ட வீடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். அவர்கள், தினமும் அத்தியாவசிய தேவைக்கு அதிகாலையில் எழுந்து கடைக்கு செல்வது வழக்கம். இந்தவேளையில், நேற்று காலையில், கோதண்டராமர் கோயில் அருகே ஒரு வீட்டின் வெளிபுறம் மூட்டைகள் இருந்தன. இதை பார்த்த மக்கள், தேவையில்லாத பொருட்களை, யாராவது போட்டு இருப்பார்கள் என நினைத்தனர்.பின்னர், அப்பகுதியில் உணவுதேடி, வந்த நாய்கள் மற்றும் மாடுகள் அந்த மூட்டைகளை இழுத்து சாலையில் வீசின. அதை கிளறி பிரித்தபோது, அதில் இருந்தவை அனைத்தும் காலாவதியான மாத்திரைகள் என தெரிந்தது. இதை பார்த்ததும், பொதமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி உடனடியாக சுகாதார துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், யாரும் அங்கு சென்று, காலாவதியான மாத்திரையை கைப்பற்றி கொண்டு செல்லவில்லை.
இந்த மாத்திரைகள் மருந்தகங்களில் காலாவதி ஆனதால், சாலையில் கொண்டு வந்து வீசப்பட்டதா, மர்மநபர்கள் மருந்தகங்களில் திருடி, சாலையில் வீசிவிட்டு சென்றனரா, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரைகளா, போதை மாத்திரைகளா என்பது மாவட்ட சுகாதாரத்துறை ஆய்வுக்கு பின்புதான் தெரியவரும். ஆனால், சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
மேலும் செய்திகள்
வாடகை கார் டிரைவர் கொலை வழக்கில் 2வது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனை முற்றுகை
வாடகை கொடுக்க முடியாததால் விரக்தி: சமையல் தொழிலாளி தற்கொலை
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,927 வழக்குகளுக்கு தீர்வு
காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் ரூ. 2.22 கோடி மதிப்பீட்டில் பொது கட்டிடம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறப்பு: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
விலங்குகள் தவறி விழுவதை தவிர்க்க திறந்து கிடக்கும் கிணற்றுக்கு இரும்பு கம்பி வலை அமைக்கப்படுமா?
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்