ஒன்றிய அரசை கண்டித்து இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
1/21/2022 4:21:42 AM
கிருஷ்ணகிரி, ஜன.21: டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழக கலாச்சார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலக்குழு உறுப்பினர் சிவராஜ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் உபேத் முனியன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணமூர்த்தி, சுபத்ரா, பெருமாள், சங்கரன், துரை, இக்பால் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர். பர்கூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் பவுன்ராஜ் தலைமை வகித்தார். கண்ணு, சிவகுமார், முனிசாமி, திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டு, கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் இருந்து விடுதலைப் போராட்ட வீரர்களான வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரின் உருவபடங்கள் இடம்பெறும் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது,’ என்றனர்.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு
வேப்பனஹள்ளி அருகே தக்காளி, வாழை தோட்டத்தை நாசம் செய்த யானைகள்
குறை தீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
பொன்மலை பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
அனைத்து வங்கிகள் சார்பில் மாவட்டத்தில் 1,326 பயனாளிகளுக்கு ₹96 கோடி கடன் வழங்க ஏற்பாடு
ஜமாபந்தியில் 2 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்