கொடைக்கானலில் பராமரிப்பின்றி பாழாகும் செட்டியார் பூங்கா
1/21/2022 4:17:27 AM
கொடைக்கானல், ஜன. 21: கொடைக்கானல் நகரில் தோட்டக்கலை துறை சார்பில் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் செட்டியார் பூங்கா தற்ேபாது பராமரிப்பின்றி மிகவும் சேதமடைந்து உள்ளது. இங்குள்ள நடைபாதைகள் அனைத்தும் பெயர்ந்து கிடக்கின்றன. கடந்த கஜா புயல் காலத்தில் விழுந்த மரங்கள் கூட அகற்றப்படாத நிலை உள்ளது. பெயரளவிற்கு கூட பூக்கள் இல்லாத சூழ்நிலையில் இப்பூங்காவிற்குள் உள்ளே சென்று பார்ப்பதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவது வேதனையாக உள்ளது என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கொடைக்கானல் செட்டியார் பூங்காவிற்கு நுழைவு கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முறையான பராமரிப்பின்றி இருப்பதும், பூக்கள் இல்லாத நிலை இருப்பதை கண்டும் ஏமாற்றமடைந்தோம். இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டால் பதில் கூட கூறுவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து செட்டியார் பூங்காவை புதுப்பித்து ஆண்டுதோறும் பூக்கள் பூப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பூங்காவில் விழுந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும்’ என்றனர்.
மேலும் செய்திகள்
ரயில் மோதி வாலிபர் பலி
லாரி-வேன் மோதி 3 பேர் படுகாயம்
நகை திருடிய கோயில் பெண் ஊழியர் கைது
வடமதுரை யூனியன் ஊராட்சிகளில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
பாரம்பரிய உணவு உடலுக்கு ஆரோக்கியமானது கலெக்டர் தகவல்
மனைவி தகராறு; கணவர் தற்கொலை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்