திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றம்
1/21/2022 4:17:20 AM
திண்டுக்கல், ஜன. 21: திண்டுக்கல்- நத்தம் சாலை குள்ளனம்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அருகில் கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தது. இதனை அகற்ற அரசினர் தொழிற்பயிற்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் மனு அளித்தனர். இதை தொடர்ந்து நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தனபாலன், இளநிலை பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோரது தலைமையில் தேசிய நெடுஞ்சாலை துறையின் பணியாளர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். அசம்பாவிதத்தை தவிர்க்க திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையில் எஸ்ஐக்கள் விஜய், மலைச்சாமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் செய்திகள்
கோயில் திருவிழா
பழநியில் பக்தர்களுக்கு மஞ்சப்பை வழங்கல்
வடமதுரையில் ரூ.4.5 கோடியில் குளத்தை தூர்வார பூமிபூஜை காந்திராஜன் எம்.எல்.ஏ பங்கேற்பு
பழநியில் கூண்டு வைத்து பறவைகளை பிடித்தவர் கைது ரூ.25 ஆயிரம் அபராதம்
சொத்து முடக்கம்
ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!