பேரையூர் பைபாஸ் சாலை பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து
1/21/2022 4:16:51 AM
பேரையூர், ஜன. 21: பேரையூர் பைபாஸ் சாலையிலுள்ள பாலத்தின் இருபுறங்களிலும் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மதுரை மாவட்டம், பேரையூர் நகர் பகுதிகளுக்குள் வராமல் கனரகரக வாகனங்கள் செல்ல தாலுகாஅலுவலகம், அரசு மருத்துவமனை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக பேரையூர் முக்குச்சாலையிலிருந்து ராஜபாளையம் - டி.கல்லுப்பட்டி நெடுஞ்சாலையில் இணைக்கும் இடமான எம்.சுப்புலாபுரம் வரை பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக வத்திராயிருப்பு, எஸ்.மேலப்பட்டி, விருதுநகர் செல்லும் பஸ்கள் செல்கின்றன. மேலும் பகலில் மட்டுமல்லாமல் கனரக வாகனங்கள் இரவு முழுவதும் லாரிகளில் சிமெண்ட் மூட்டைகள், பருத்தி பஞ்சுகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு ராஜபாளையம், சிவகாசி, திருவில்லிபுத்தூர், கோவில்பட்டி, நாகர்கோவில் வரை செல்லக்கூடிய அனைத்துரக கனரக வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன.
இந்த சாலையில் அரசுமருத்துவமனை மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள பாலத்தின் இருபுறங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு சிறிது, சிறிது பெயர்ந்து பெரும் பள்ளமாக மாறி விட்டது. இந்த பள்ளங்களைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் கட் செய்து ஓட்டுகின்றனர். இதனால் சாலை விதிகளை மதித்து வருபவர்கள் கூட இந்த பள்ளத்தால் விபத்தில் சிக்குகின்றனர். பகலை விட இரவு நேரங்களில் இந்த பாலத்தின் வழியாக செல்பவர்கள் மிக கவனமாக செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதில் பெரிய விபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படும் நிலையில் இந்த ஆபத்தான பள்ளங்கள் உள்ளன. உடனடியாக இந்த பள்ளங்களை சரி செய்வ துடன், சாலையின் இருபுறங்களிலும் மீண்டும் பள்ளங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
இருக்கன்குடிக்கு வேண்டும் நிரந்தர பஸ்நிலையம்
திருவில்லிபுத்தூரில் ஒன்றிய அரசை கண்டித்து கூழ் காய்ச்சும் போராட்டம்
புதுக்கோட்டை ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் துவக்கம்
கோட்ட அளவில் மே 17ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
சிவகாசி யூனியனில் பயிற்சி முகாம்
உத்தமபாளையத்தில் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!