வயல் வெளியில் திரிந்த மலைப்பாம்பு மேலூர் அருகே பரபரப்பு
1/21/2022 4:16:44 AM
மேலூர், ஜன. 21: மேலூர் அருகே வயல் பகுதியில் சுற்றி திரிந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே கம்பூர் ஊராட்சியில் உள்ள அலங்கம்பட்டி கோட்டையன்குட்டு பகுதியில் உள்ள வயல் வெளியில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுற்றி திரிந்தது. இதுகுறித்து கிராமத்து இளைஞர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வழக்கம் போல் வனத்துறையினர் காலம் தாழ்த்தியுள்ளனர். இதனை தொடர்ந்து கிராம இளைஞர்கள் அஜித், கோபி, சேது, சரவணன் ஆகியோர் அந்த மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பாக வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகு வனக்காப்பாளர் சங்கச்சாமியிடம் அந்த பாம்பு ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அதனை வனத்திற்குள் சென்று வனத்துறையினர் விடுவித்தனர்.
மேலும் செய்திகள்
இருக்கன்குடிக்கு வேண்டும் நிரந்தர பஸ்நிலையம்
திருவில்லிபுத்தூரில் ஒன்றிய அரசை கண்டித்து கூழ் காய்ச்சும் போராட்டம்
புதுக்கோட்டை ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் துவக்கம்
கோட்ட அளவில் மே 17ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
சிவகாசி யூனியனில் பயிற்சி முகாம்
உத்தமபாளையத்தில் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!