மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்தி வளாகத்தில் திரு அறை தரிசனம்
1/21/2022 4:08:19 AM
குறிஞ்சிப்பாடி, ஜன. 21: வள்ளலார் சித்தி அடைந்த, மேட்டுக்குப்பத்தில் திரு அறை தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்த இடமான மருதூர், தண்ணீரில் விளக்கு ஏற்றிய இடமான கருங்குழி, அணையா அடுப்பு தர்ம சாலை மற்றும் சத்திய ஞானசபை உள்ள வடலூர், வள்ளலார் சித்தியடைந்த மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களில் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசப் பெருவிழா தொடங்கியது. இதையடுத்து, 18ம் தேதி 6 மணி, 10, மதியம் 1, இரவு 7, 10 மற்றும் 19ம் தேதி 6 மணி ஆகிய ஆறு காலங்களில், 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அதை அடுத்து, வள்ளலார் எழுதிய திருவருட்பா, வள்ளலார் புகைப்படம் ஆகியவைஅடங்கிய பேழை ஒன்று வடலூர் சபையிலிருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்தி அடைந்த, சித்தி வளாகத்தில் திரு அறை தரிசனம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, வழிபட்டனர்.
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!