எம்எல்ஏவின் தந்தை தவறவிட்ட ரூ.1 லட்சத்தை மீட்டு ஒப்படைத்த ஊழியர்: புத்தாடை வழங்கி கௌரவிப்பு
1/21/2022 4:04:36 AM
திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தற்போதைய மணப்பாறை எம்எல்ஏ அப்துல்சமதுவின் தந்தையுமான பக்கீர் முகமது, ரூ.1 லட்சம் எடுத்து கொண்டு உரம் வாங்குவதற்காக நேற்று முன்தினம் மாமல்லபுரம் புறப்பட்டார். கிழக்கு கடற்கரை சாலை, பூந்தண்டலம் பகுதியில் உள்ள செடிகள் வளர்ப்பு நர்சரிக்கு சென்ற அவர், அங்கு தேனீர் அருந்தி விட்டு சென்றார். சிறிது தூரம் சென்று பார்த்தபோது, அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பின்னர், நர்சரிக்கு சென்று தேடிப்பார்த்து, விரக்தியில் வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில், பக்கீர் முகமது தவற விட்ட ரூ.1 லட்சம், நர்சரியில் உள்ள செடிகளுக்கு நடுவே கிடந்தது. அதை நர்சரி ஊழியர் நூர்முகமது (30), எடுத்து நர்சரி உரிமையாளர் பாஸ்கரனிடம் கொடுத்தார். உடனே அவர், பக்கீர் முகமதுவை செல்போனில் தொடர்பு கொண்டு ‘உங்கள் பணம் கிடைத்து விட்டது. வந்து வாங்கி செல்லுங்கள்’ என தெரிவித்தார். இதையடுத்து அவர், நர்சரிக்கு சென்று தவற விட்ட பணத்தை பெற்று கொண்டார். மேலும், நேர்மையாக நடந்து கொண்ட ஊழியர் நூர்முகமதுவை பாராட்டி நன்றி தெரிவித்து, ரூ.5 ஆயிரம் கொடுத்தார். ஆனால் அவர், அதை வாங்க மறுத்துவிட்டார். இதனால், நெகிழ்ச்சியடைந்த பக்கீர்முகமது, அவருக்கு புத்தாடைகள் வாங்கி கொடுத்து கௌரவித்தார். மேலும், புதுப்பட்டினம் வணிகர் சங்கம் சார்பிலும் ஊழியர் நூர்முகமதுவை பாராட்டினர்.
மேலும் செய்திகள்
நந்திவரம் சுகாதார நிலைய வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை முகாம்
தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்
பசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டி: டிஐஜி சத்யபிரியா வழங்கினார்
வாகன விபத்தில் தொழிலாளி பலி
மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அதிகாரி ஆய்வு
அரையப்பாக்கம், ஏறுப்பாக்கம் கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தார்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!