வாகனஓட்டிகள் வலியுறுத்தல் கடவுளுக்கு சமமாக செயல்படும் செவிலியர்கள்
1/21/2022 12:19:24 AM
நாகை, ஜன.21: நாகை இஜிஎஸ்.பிள்னை செவிலியர் கல்லூரியில் மீண்டும் மஞ்சப்பை வழங்கும் விழா நடந்தது. கல்லூரி தலைவர் ஜோதிமணி தலைமை வகித்தார். செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். தமிழக முதல்வர் அறிமுகம் செய்த மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது: நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்தின் சார்பில் நடப்பு கல்வியாண்டில் புதிதாக இஜிஎஸ்.பிள்ளை செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரி தொடங்கியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் நர்சிங் படிப்பு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் செவிலியர்கள் கடவுளுக்கு சமமாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களின் பணி மகத்தானது, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் வருவதற்கும், மேலும் பரவாமல் இருப்பதற்கும் அவர்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர். வரும் காலங்களில் செவிலியர்களின் பங்களிப்பு அதிகமாக தேவைப்படும். எனவே புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக படிக்க வேண்டும் என்றார்.தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், அறக்கட்டளை உறுப்பினர்கள் அருள்பிரகாசம், சங்கர்கணேஷ், இயக்குனர் சுமதிபரமேஸ்வரன், முதன்மை செயல் அலுவலர் சந்திரசேகர், இயக்குனர் விஜயசுந்தரம், தேர்வு நெறியாளர் சின்னத்துரை, செவிலியர் கல்லூரி முதல்வர் பாபுஆனந்து மற்றும் பலர் கலந்துகெண்டனர்.
மேலும் செய்திகள்
கொள்ளிடம் அருகே நீர்த்தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் மிதந்த கொக்கு குடிநீரில் கலந்ததால் பொதுமக்கள் அவதி
எண்ணை ஆலை விரிவாக்க பணிக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய தொகை வழங்க வேண்டும்
காரைக்கால் முத்துமாரி நாகத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்
அசானி புயலால் 4 நாட்களுக்கு பின் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
பைக் மீது அரசு பேருந்து மோதி வாலிபர் பரிதாப பலி
மாணலூரில் மக்கள் தொடர்பு முகாம்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!