குடும்ப பிரச்னையால் விபரீத முடிவு 2 மகள்களுடன் கிணற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
1/20/2022 2:17:55 AM
சென்னை: புதுப்பேட்டை காஞ்சி முதலி தெருவை சேர்ந்தவர் ஞானவேல்(44), ஆட்டோ டிரைவர். இவர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு, 2வதாக அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி(30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, பூஜா என்ற 2 மகள்கள் இருந்தனர். 2 நாட்களுக்கு முன் ஞானவேல் மற்றும் அவரது 2 மகள்கள் வீட்டிலிருந்து திடீரென காணாமல்போயினர். அவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்படி எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில், மறைமலைநகர் அருகே கடம்பூர் பகுதியில் நேற்று காலை விவசாய கிணற்றில் ஒருவர் 2 குழந்தைகளுடன் கட்டி பிடித்த நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல்வந்தது. போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் சென்று 3 சடலங்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஞானவேல் என்பது தெரியவந்தது. மேலும், எழும்பூர் போலீசார் விசாரித்தனர். அதில், ஞானவேலின் மனைவி, `இப்படி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தால் எப்படி குடும்பத்தை நடத்துவது’ என்று கேள்வி கேட்டுள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஞானவேல் மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் செய்திகள்
சபலத்தில் மயங்கிய வாலிபரிடம் ரூ.5 ஆயிரம் டெபிட் கார்டு அபேஸ்: 4 பெண்களுக்கு வலை
சென்னை காவல் துறையில் 154 வாகனங்கள் 30ம் தேதி ஏலம்
சென்னை மாநகரில் இயக்க 100 மின்சார பேருந்துகள் கொள்முதல்: எம்டிசி நிர்வாகம் திட்டம்
மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க மெரினா கடற்கரையில் நிரந்தர நடைபாதை அமைக்கும் பணி: ரூ.1.14 கோடியில் விரைவில் தயாராகிறது
வாகன நிறுத்த இடங்களில் விதிமீறும் வாகன உரிமையாளர்களின் மீது போலீசில் புகார் அளிக்கப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை
ராஜிவ்காந்தி சாலையில் ஆக்கிரமிப்பில் சர்வீஸ் சாலை: போக்குவரத்து பாதிப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்