நடைபாதை தகராறில் ராணுவ வீரர் உள்பட 8 பேர் மீது வழக்கு
1/20/2022 1:52:28 AM
கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலப்பட்டி காலனியை சேர்ந்தவர் பூவரசன்(41). இவர் கிருஷ்ணகிரி ஆர்டிஓ அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான ஜெயசீலன்(24) என்பவருக்கும், பொதுவழி நடைபாதை குறித்து பிரச்னை உள்ளது. நேற்று முன்தினம், மீண்டும் இது குறித்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பூவரசனை ஜெயசீலன், சேகர் மனைவி வளர்(28), வெற்றிவேல்(25), டெல்லியில் ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரரான ராமமூர்த்தி(38) ஆகியோர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து பூவரசன் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகாரளித்தார். இதேபோல் வெற்றிவேல், தன்னையும், தனது குடும்பத்தினரையும் பூவரசன், சரவணன்(28), அகில்மூர்த்தி(29), ராம்குமார்(27) ஆகிய 4 பேர் தாக்கியதாக போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு
வேப்பனஹள்ளி அருகே தக்காளி, வாழை தோட்டத்தை நாசம் செய்த யானைகள்
குறை தீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
பொன்மலை பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
அனைத்து வங்கிகள் சார்பில் மாவட்டத்தில் 1,326 பயனாளிகளுக்கு ₹96 கோடி கடன் வழங்க ஏற்பாடு
ஜமாபந்தியில் 2 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்