திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
1/20/2022 12:05:33 AM
திருவள்ளூர்: வீரராகவர் கோயில் குளத்தில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விடப்பட்ட மீன்கள் செத்து மிதந்தன.திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் மீன்கள் குட்டிகள் விடப்பட்டன. தொடர்ந்து, கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள், கோயில் குளத்தில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், நீராடவும் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், கோயில் குளத்தில் விடப்பட்ட மீன்கள் 2 கிலோ முதல் 5 கிலோ வரை வளர்ந்து இருந்தது. அந்த மீன்கள் நேற்று காலை செத்து மிதந்து கிடந்தன. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர், வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் அங்கு வந்த அதிகாரிகள், செத்து மிதக்கும் மீன்களையும், நீரையும் ஆய்வுக்கு அனுப்பினர். ஆய்வின் முடிவில் மீன்கள் இறப்புக்கான காரணம் தெரியும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
செங்குன்றத்தில் பயங்கரம்: முன்விரோத தகராறில் ரவுடி வெட்டி கொலை: 2 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 91.06% தேர்ச்சி
ராமாபுரத்தில் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்ககோரி தொடர் முழக்க போராட்டம்
பழவேற்காடு உப்பங்கழி ஏரியில் 37 மீனவ குடும்பங்கள் மீன்பிடிக்க செல்ல உரிய பாதுகாப்பு வழங்கப்படும்: போலீசார் உறுதி
எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும் வாடகை கட்டாத கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
திருவள்ளூர் அருகே அம்மன் கோயில்களை உடைத்து 24 சவரன், ரூ5 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்