அண்ணா,கலைஞர் லட்சியங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு
1/19/2022 3:34:22 AM
காரைக்குடி, ஜன.19: அண்ணா, கலைஞர் கண்ட லட்சியங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். காரைக்குடியில் கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் குணசேகரன் வரவேற்றார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்து பேசுகையில், அரசின் திட்டங்களையும், இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை கலைஞர் தமிழ்ச்சங்கம் சிறப்பாக செய்து வருவது பாராட்டக் கூடியது. பொதுக்கூட்டங்களை கேட்கும் அளவிற்கு மக்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. எனவே இசையோடு சேர்ந்து மக்களிடம் சேர்க்க வேண்டிய கருத்துக்களை பரப்பும் முயற்சியாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
தமிழர்களின் விழா பொங்கல் திருநாள். நமது பண்பாடு, கலாச்சாரம், மொழியை பாதுகாக்கும் இயக்கம். அண்ணா, கலைஞர் இன்று நம்மிடம் இல்லை. அவர்களின் கொள்கை, லட்சியங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். முதல்வரின் சிறப்பான ஆட்சியில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. தமிழன் என்ற இனம் உள்ளவரை திமுக இருக்கும் என்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன் துவக்கி வைத்து பேசுகையில், தமிழாகவே வாழ்பவர் கலைஞர். அவரின் பெருமைகளை, இயக்கத்தின் வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க இதுபோன்ற தொடர் நிகாழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு அறிவித்த அனைத்து அறிவிப்புகளையும் செயல்படுத்தி மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார் என்றார். நிகழ்ச்சியை முன்னிட்டு பேராசிரியர் ராஜதுரை தலைமையில் துரைபாண்டியன், அகிலா, அபி, ராஜன், சாந்தா, மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்ட இன்னிசை பட்டிமன்றம் நடத்தப்பட்டது.
மேலும் செய்திகள்
இன்ைறய மின்தடை பகுதிகள்
ஆபரேசன் கந்துவட்டியில் இரண்டு பேர் அதிரடி கைது
வைகாசி தேர்த்திருவிழா
மின்கம்பி உரசியதால் வைக்கோல் லாரியில் தீ
ரயிலில் அடிபட்டு சாவு
முதல்வர் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!