அந்தியூரில் ஸ்கூட்டரில் வீதிவீதியாகச்சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ
1/19/2022 3:21:46 AM
அந்தியூர், ஜன. 19: அந்தியூர் நகர பகுதிகளில் ஸ்கூட்டரில் சென்று எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட தவிட்டுப்பாளையம், காந்திஜி வீதி, நஞ்சப்பாவீதி வீதி, காளிதாஸ் காலனி, பகவதியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் ஸ்கூட்டரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் பிரச்னை, சுகாதாரம் மருத்துவ வசதிகள் குறித்து எம்எல்ஏவிடம் கூறி மனு அளித்தனர். உடனடியாக பேரூராட்சி பணியாளர்களை தொடர்பு கொண்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் எந்தவித குறைபாடும் இன்றி உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் கூறினார். இது குறித்து எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் கூறுகையில், காரில் சென்று பொதுமக்களை சந்திக்கும் பொழுது அதிகமாக பொதுமக்களின் தேவைகளை அறிய முடியவில்லை. ஸ்கூட்டரில் செல்வதால் எளிதில் வீதிகளில் செல்லும் மக்களை கூட சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகள் என்ன என்று கேட்க முடிகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நலத்திட்ட உதவிகள் அனைத்துதரப்பு மக்களுக்கும் பாரபட்சமின்றி எளிதாக கிடைத்திட இவ்வாறு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறேன், என்றார். உடன் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் குணசேகரன், மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் இருந்தனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு பஸ் ஸ்டாண்ட் எதிரே தார் சாலை அமைக்காததை கண்டித்து மறியல்
கோடை தாக்கம் குறைந்ததால் எலுமிச்சை விலை திடீர் சரிவு
11,890 அடுக்குமாடி குடியிருப்புகளில் 932 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு
விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு
450 லிட்டர் ஊறல் பறிமுதல் தசை சிதைவு நோய்க்கான ஆராய்ச்சி நிலையம் துவங்க வேண்டும்
சாராயம் காய்ச்சியவர் கைது
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!