ஒன்றிய முன்னாள் அமைச்சர் பிறந்தநாள் விழா
1/19/2022 3:21:33 AM
ஈரோடு, ஜன. 19: ஒன்றிய முன்னாள் அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 82வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி.கண்ணப்பன் தலைமை வகித்தார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறைத் தலைவர் ஜெ.சுரேஷ் வாழப்பாடி ராமமூர்த்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில சிறுபான்மைத்துறை ஒருங்கிணைப்பாளர் எம். ஜவஹர் அலி இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவர் பி.ஏ. பெரியசாமி, மண்டலத் தலைவர் ஜாபர் சாதிக், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் முகமது அர்ஷத், ஈரோடு மாவட்ட சிறுபான்மைத் துறை துணைத் தலைவர் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்தியூர்: முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 82வது பிறந்த நாளையொட்டி அந்தியூர் தவிட்டுப்பாளையம் தியாகி கோவிந்தன் திடலில் அவரது உருவ படத்திற்கு காங்கிரஸ் நகர துணைத்தலைவர் முருகேசன் தலைமையில் பொண்ணுபையன் முன்னிலையில் காங்கிரஸ் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் பாசம் தொண்டு நிறுவனர் அரிமா பாசம் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் கண்ணப்பன், ஆறுமுகம், ராமநாதன், குணசேகரன், புவனேஷ், ராகவேந்திரன், பேங்க் மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு பஸ் ஸ்டாண்ட் எதிரே தார் சாலை அமைக்காததை கண்டித்து மறியல்
கோடை தாக்கம் குறைந்ததால் எலுமிச்சை விலை திடீர் சரிவு
11,890 அடுக்குமாடி குடியிருப்புகளில் 932 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு
விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு
450 லிட்டர் ஊறல் பறிமுதல் தசை சிதைவு நோய்க்கான ஆராய்ச்சி நிலையம் துவங்க வேண்டும்
சாராயம் காய்ச்சியவர் கைது
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!