கல்லூரி மாணவர் உள்பட இருவர் மீது தாக்குதல்
1/19/2022 12:32:43 AM
ஸ்பிக்நகர், ஜன. 19: தூத்துக்குடி அடுத்த முள்ளக்காடு முத்தையாபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமணியின் மகன் பெனில் சரவணன்(20). தூத்துக்குடியில் செயல்படும் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பொன்முருகனின் மகனான பாலமணிகண்டன் (24) என்பவரும் முள்ளக்காடு காந்திநகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த வினித், சக்திவேல், திருமணி, சாய்சந்திரன், போஜன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கட்டை மற்றும் கல்லால் சரவணனையும், பாலமணிகண்டனையும் சரமாரியாகத் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின்பேரில் வழக்குப் பதிந்த முத்தையாபுரம் எஸ்ஐ முத்துமாலை, தாக்குதல் நடத்திய 6 பேரையும் தேடி வருகிறார்.
மேலும் செய்திகள்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஏரல் பேரூராட்சி கவுன்சிலர் உள்பட அமமுகவினர் திமுகவில் ஐக்கியம்
தூத்துக்குடியில் இன்றும், நாளையும் எஸ்ஐ பதவிக்கான எழுத்து தேர்வு
ஸ்ரீவைகுண்டத்தில் பார்வர்டு பிளாக் துவக்க தினவிழா
பொதுத்தேர்வில் சாதனை படைத்த கயத்தாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பெருங்குளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்
வரிப்பிலான்குளத்தில் பயணியர் நிழற்குடை: ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!