தூத்துக்குடியில் வாலிபர் கொலையில் கூலி தொழிலாளி கைது
1/19/2022 12:32:24 AM
தூத்துக்குடி, ஜன. 19: தூத்துக்குடி தாளமுத்துநகர் சமீர் வியாஸ் நகரை சேர்ந்த லூயிஸ் பெட்டின் மகன் அலெக்ஸ் (31). கட்டிடத் தொழிலாளியான இவர் மீது திருட்டு வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 13ம்தேதி அதிகாலை தூத்துக்குடி முருகேசன் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் அடித்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற சிப்காட் போலீசார், உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவந்தனர். இதில் நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த ஜான்சன் உள்ளிட்ட சிலருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இதுதொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், தலைமறைவான ஜான்சனை உள்ளிட்டோரை தேடிவந்தனர். இந்நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய ஜான்சனின் நண்பரான அண்ணாநகரை சேர்ந்தவரும், லித்தொழிலாளியுமான ஜெயசீலன் (34) என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதன் விவரம் வருமாறு: கடந்த மாதம் ஜான்சனின் கார் கண்ணாடியை அலெக்ஸ் உடைத்துள்ளார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. அப்போது ஜான்சனை அலெக்ஸ் சரமாரியாகத் தாக்கினாராம். இதனால் தீராத ஆத்திரத்தில் இருந்துவந்த ஜான்சன் அலெக்சை சம்பவத்தன்று கொலை செய்துள்ளார். இதில் ஜான்சனை சம்பவ இடத்திற்கு ஜெயசீலன் தனது பைக்கில் அழைத்து சென்றதோடு கொலை நடந்த பிறகு அங்கிருந்து தப்பிச்செல்ல அழைத்துத் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து ஜெயசீலனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஏரல் பேரூராட்சி கவுன்சிலர் உள்பட அமமுகவினர் திமுகவில் ஐக்கியம்
தூத்துக்குடியில் இன்றும், நாளையும் எஸ்ஐ பதவிக்கான எழுத்து தேர்வு
ஸ்ரீவைகுண்டத்தில் பார்வர்டு பிளாக் துவக்க தினவிழா
பொதுத்தேர்வில் சாதனை படைத்த கயத்தாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பெருங்குளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்
வரிப்பிலான்குளத்தில் பயணியர் நிழற்குடை: ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!