மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
1/19/2022 12:31:55 AM
மானூர், ஜன.19: மானூர் அருகே உள்ள தெற்குபட்டியைச் சேர்ந்தவர் வேல்சாமி (48). விவசாயி. பேட்டை காந்திநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வேல்சாமி தெற்குபட்டியில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை தோட்டத்திற்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது தோட்டத்தின் அருகே ராமகிருஷ்ணன் என்பவரின் விவசாய வயலில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி வேல்சாமி இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து மானூர் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நெல்லை உடையார்பட்டி திருஇருதய ஆலய திருத்தல மாணிக்க ஆண்டு விழாவில் சப்பரபவனி
நெல்லை டவுனில் பொதுமக்கள் திடீர் மறியல்: 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வினியோகம்
விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி மேலவாசல் முருகன் கோயிலில் தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு
நெல்லையில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்
வயநாட்டில் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்