8 ஊர் சாமி சந்திப்பு தைப்பூச தீர்த்தவாரி கோயில்கள் உள்ளே பக்தர்கள் இன்றி நடைபெற்றது
1/19/2022 12:25:12 AM
குளித்தலை,ஜன.19: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் வருடந்தோறும் தைப்பூச தினத்தன்று அய்யர்மலை குளித்தலை கருப்பத்தூர் திருவேங்கிமலை ராஜேந்திரம் பெட்டவாய்த்தலை முசிறி வெள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுவாமி அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து வந்து குளித்தலை கடம்பர் துறையில் சந்திப்பு கொடுத்து பின்னர் சிவாச்சாரியார்கள் கொண்டுவந்த சூலாயுதம் வைத்து தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கமாக இருந்தது. இந்த தீர்த்த வரியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் வெளி மாவட்டத்தில் இருந்தும் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் கலந்து கொள்வார்கள். அடுத்த நாள் சுவாமிவிடையாற்றி உற்சவம் நடைபெறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்குதல் மூன்றாவது அலை வீசி வருவதால் தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. அதில் குறிப்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவித்திருந்தது. அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலையில் நேற்று நடைபெற இருந்த தைப்பூச திருவிழா மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி கொரோனா நெறிமுறைகள் வழிகாட்டுதலின்படி 8 ஊர் சுவாமிகள் உள்ள இடத்திலேயே அருகில் உள்ள நீர் நிலைகளில் சிவாச்சாரியார்கள் நீர் எடுத்துவந்து பக்தர்கள் இன்றி கோவில் உள்ளே அஸ்திர தேவதைக்கு தீர்த்தவாரி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் தைப்பூச தினத்தன்று வேண்டுதல்களை நிறைவேற்ற குறைந்தளவு வந்திருந்தனர். அவர்கள் கடம்பன் துறையில் வேண்டுதலை நிறைவேற்ற முடிகாணிக்கை செலுத்தி காவிரி நதியில் புனித நீராடி புத்தாடை உடுத்தி காது குத்து நிகழ்ச்சி நடத்தி கோயில் நுழைவு வாயில் முன்பு சூடம் மற்றும் விளக்குகளை ஏற்றி வைத்து தரிசனம் செய்து சென்றனர். பொதுமக்கள் பக்தர்கள் கோயில் உள்ளே செல்ல அனுமதி மறுத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும் செய்திகள்
சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு
தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி
கரூரில் முதன்முறையாக துவக்கம்; கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி
கரூர் தபால் தந்தி அலுவலகம் முன் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 வார விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் 1041 பள்ளிகள் திறப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்