ஆண்டிமடம் அருகே விவசாயி சடலம் மீட்பு
1/19/2022 12:24:08 AM
ஆண்டிமடம்,ஜன.19: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (41) இவருக்கு செந்தமிழ்ச்செல்வி (40) என்ற மனைவியும் சந்துரு என்ற மகனும், ஷர்மிளா என்ற மகளும் உள்ளனர்.இருவரும் திருமணம் ஆகாதவர்கள். இந்நிலையில் கருணாகரன் தனது வீட்டில் இருந்து சிறிது தூரம் தள்ளி உள்ள முந்திரி தோப்பில் மா மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். ஆடு,மாடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து கருணாகரன் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த உறவினர்கள் சென்று கருணாகரனின் உடலை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர் எப்படி இறந்தார். கொலையா? தற்கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நாச்சாரம்மன் கோயில் தேரோட்டம்
பாடாலூர் மேற்கு கிராமத்தில் பொது பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
ஜெயங்கொண்டத்தில் தனியார் பள்ளி முன்புறம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் 79 பயனாளிகளுக்கு ரூ.34.66 லட்சத்தில் நலத்திட்ட உதவி
தா.பழூர் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை கண்டறிய 200 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!