பிரபல ரவுடி கைது
1/12/2022 3:18:34 AM
சேலம்: சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரைமூக்கன் (எ)செல்வகுமார்(51). இவர் அம்மாபேட்டை காவல்நிலையத்தில் உள்ள ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இதனிடையே செல்வகுமார் திடீரென வீட்டை காலி செய்து தலைமறைவானார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது.இந்நிலையில் நேற்று விலை உயர்ந்த சொகுசு காரில் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் செல்வகுமார் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே சைக்கிளில் வந்த ஒருவரை இடித்து தள்ளியுள்ளார்.
இதையடுத்து சைக்கிளில் வந்தவர் செல்வகுமாரிடம் தட்டிக்கேட்டபோது அவரை பட்டா கத்தியை எடுத்து வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை தடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ரவுடி செல்வகுமாரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
ஓடும் ரயிலில் இருந்து குதித்த ரிக் அதிபர் பலி
15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
வாலிபரை ஓட, ஓட விரட்டி வெட்டிய ரவுடி
வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை
ஒரே மாதத்தில் 104 சுகப்பிரசவங்கள் கவனம் ஈர்க்கும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள்
தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!