900 கிலோ குட்கா பறிமுதல்
1/12/2022 3:13:32 AM
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தடங்கம் பகுதியில் அதியமான்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, காரில் இருந்த நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார், காரை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தபோது, மிட்டநூலஅல்லி பகுதியைச்சேர்ந்த நரசிம்மன்(41), இவரது மகன் பிரபாகரன்(22) மற்றும் பிடமனேரி பகுதியைச் சேர்ந்த மனோஜ்(23) ஆகியோர் பெங்களூருவில் இருந்து குட்காவை குறைந்த விலைக்கு வாங்கி வந்து, தர்மபுரியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தற்கு எடுத்து வந்ததை ஒப்புக்கொண்டனர். அதன் அடிப்படையில் அதியமான்கோட்டை போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 900 கிலோ குட்கா, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மகுடஞ்சாவடி வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்
குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவி கேட்டு தந்தை கண்ணீர் மனு
சேலம் மாவட்டத்தில் ரயில்வே மேம்பால பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு
கிலோ ₹100க்கு விற்பனை செய்யும் நேரத்தில் கடைகளில் தக்காளி கிரேடு திருடிய ‘டிப்டாப்’ வாலிபர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு; 3 பேருக்கு வலை
கச்சுப்பள்ளியில் திட்ட செயலாக்க ஆலோசனை கூட்டம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!