மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்
1/12/2022 3:13:22 AM
தர்மபுரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தர்மபுரி மாவட்ட குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் பேசினார். மாவட்ட செயலாளர் குமார், செயற்குழு உறுப்பினர்கள் மாதன், சிசுபாலன், அர்ச்சுணன், முத்து, நாகராஜன், கிரைஸா மேரி உள்ளிட்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தேவையான மருந்துகள், கட்டமைப்பு வசதிகளுடன் தயார் நிலையில் வைக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி, மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மருத்துவ பணியாளர்களை நியமித்து, உயிர்காக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் விளைநிலத்திலும், குடியிருப்பு பகுதியிலும் நுழைந்து பயிர் சேதத்துடன், உயிர் சேதத்தையிம் ஏற்படுத்தி வருகிறது. காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க, வனத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்க வேண்டும். வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்தும் வகையில், வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும். பொங்கல் பண்டிகையையொட்டி பால் உற்பத்தியாளர்களுக்கு, போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
மகுடஞ்சாவடி வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா கிராம வேளாண் வளர்ச்சி திட்டம்
குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவி கேட்டு தந்தை கண்ணீர் மனு
சேலம் மாவட்டத்தில் ரயில்வே மேம்பால பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு
கிலோ ₹100க்கு விற்பனை செய்யும் நேரத்தில் கடைகளில் தக்காளி கிரேடு திருடிய ‘டிப்டாப்’ வாலிபர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு; 3 பேருக்கு வலை
கச்சுப்பள்ளியில் திட்ட செயலாக்க ஆலோசனை கூட்டம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!