பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
1/12/2022 3:12:31 AM
விருதுநகர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி லிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள தகவல்: சிவகாசி பகுதியில் பட்டாசு உற்பத்தி தொழிலை நம்பி 8 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்து வரும் நிலையில் வேலையின்மை, குடும்ப சூழ்நிலை, வறுமையால் வேலைக்கு சென்றால் வீடு திரும்புவது நிச்சயமில்லாத நிலையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆண்டு துவக்கத்தில் மேட்டுப்பட்டி, மஞ்சள்ஓடைப்பட்டியிலும வெடி விபத்து ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெடி விபத்து நடந்த உடன் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அரசு வழங்கும் நிதியுடன் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கிய காசோலைகள் பணமின்றி திரும்பி உள்ளது. பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசே நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஆலை உரிமையாளர்கள் மீது காசோலை மோசடி வழக்கு உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாமல் தடுக்க விதிமுறைகளை கடைப்பிடிக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால்களில் அடைப்பு நீக்கும் பணி
வழிப்பறி செய்த சகோதரர்கள் கைது
சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு மேலூரில் காங்கிரசார் நடைபயணம்
மதுரை அருகே விபத்தில் ஓய்வு தலைமையாசிரியர் பலி லாரி டிரைவர் கைது
வீடு புகுந்து 8 பவுன் திருட்டு
வரதட்சணை புகாரில் கணவர் கைது
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!