காங்கயம் அருகே பைக்-லாரி மோதி வாலிபர் பலி
1/12/2022 3:06:04 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ளது காரியக்காட்டுவலசு. இந்த பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மகன் தமிழ்செல்வன் (32). இவர் நேற்று பைக்கில் காங்கயம்-நத்தக்காடையூர் ரோட்டில் சென்றார். அப்போது அங்குள்ள வே பிரிட்ஜில் இருந்து லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக லாரியும், பைக்கும் மோதிக்கொண்டது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து சின்னச்சாமி அளித்த அளித்த புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!