சூதாடிய 5 பேர் கைது
1/12/2022 3:05:37 AM
திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, செங்கப்பள்ளி சந்தை கடை அருகில் சிலர் கூடி நின்றுள்ளனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மெளனீஷ் (22), பாண்டி (27), வெங்கடேஷ் (42), தனசேகர் (27), ராஜேந்திரன் (52) என்பதும், அவர்கள் அந்த பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஊத்துக்குளி போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த ரூ. 12 ஆயிரத்து 100 ஐ பறிமுதல் செய்தனர். வெள்ளகோவில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது முத்தூர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சரவணன் (51) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த 2 லாட்டரி சீட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ஈரோடு ரோட்டில் குப்புசாமி (50) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 3 லாட்டரி சீட்டு, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்