கோவையில் மாணவர் கொலை: சடலத்தை வாங்க மறுத்து மறியல்
1/12/2022 3:02:02 AM
கோவை: கோவை ஆலாந்துறை பகுதியில் இரு தரப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த பிளஸ் 1 மாணவரை கத்தியால் குத்தினர். இதில் காயமடைந்த மாணவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இறந்தார். இந்த வழக்கில் முன்னாள் மாணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை இறந்த மாணவரின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் அரசு பள்ளி நிர்வாகம் சம்பவ நாளில் மாணவர் பள்ளிக்கு சென்ற விவரங்களை மறைத்து விட்டதாக தெரிகிறது.
பள்ளி நிர்வாகத்தை இந்த வழக்கில் தொடர்புபடுத்தாமல் இருப்பதற்காக வருகை பதிவேட்டில் மாணவர் பள்ளிக்கு வரவில்லை எனக்கூறி ‘ஆப்சென்ட்’ போட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கத்தில் பள்ளி நிர்வாகம் செயல்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக ஆலாந்துறை போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி நேற்று அரசு மருத்துவமனை முன் உள்ள ரோட்டில் உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இறந்த மாணவரின் சடலத்தை வாங்க மறுத்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஊஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு சடலத்தை பெற்று சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்