பெரம்பலூர் மாவட்டத்தில் நெல் தரிசில் பயறு சாகுபடி செய்யலாம்
1/12/2022 12:09:24 AM
பெரம்பலூர்,ஜன.12: பெரம்பலூர் மாவட்டத்தில் நெல் தரிசில் பயறு சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் வெங்கட பிரியா யோசனை வழங்கி உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு 8500 ஹெக்டேரில் சம்பா மற்றும் நவரை பருவத்தில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. நெல் அறுவடைக்குப்பிறகு நெல் தரிசில் உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படும். தற்போது நெல்அறுவடைக்கு இயந்திரங்கள் பயன்படுத்துவதாலும், கால்நடைத் தொந்தரவாலும் நெல் தரிசில் பயறு வகைப் பயிர்கள் சாகுபடி குறைந்து கொண்டு வருகிறது.
இந்நிலையில் பயறுவகை சாகுபடியை ஊக்குவிக்க, பெரம்பலூர் மாவட்டத்தில் 700 ஹெக்டேரில் பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பயறு வகை பயிர்களை பயிர் செய்யும்போது, வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்து மண்ணில் நிலைநிறுத்தப்படு கிறது. பயறு வகை பயிர்களை பயிர்செய்ய குறைவான தண்ணீரே போதுமானது. மேலும் அடுத்த குறுவை நெல்லுக்குத் தேவையான தழைச்சத்து இயற்கையாகவே கிடைக்க வழிவகை செய்கிறது. குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்க ஏதுவாகிறது. நெல் தரிசில் பயறு வகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க அதிகபட்சமாக 50 சதவீத மானியத்தில் பயறுவகைப் பயிர்களின் விதைகளை விற்பனை செய்ய அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு உளுந்து விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் 50 சதவீத மானியத்தில் திரவ ரைசோபியம், திரவ பாஸ்போ பாக்டீரியா உயிரி உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் விற்பனைக்காக அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சம்பா மற்றும் நவரை அறுவடைக்கு பிறகு நீர் பாசன வசதியுள்ள விவசாயிகள் பெரும்பாலும் கோடைக்கால நெல் பயிர் சாகுபடியை மேற்கொள்கின்றனர். இதேபோல, குறுவை, தாளடி, கோடை என தொடர் ச்சியாக நெல் சாகுபடி செய்வதால் மண்வளம் பெரிதும் பாதிப்படைகிறது. மண்ணின் பிரதான பேரூட்டச் சத்தான தழைச்சத்தை நிலைநிறுத்த வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இதை தவிர்த்து மண்வளத்தைப் பாதுகாக்கக் கூடிய உளுந்து, போன்ற பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
நெல்அறுவடை முடிவடையும் வ ரை நெல் கொள்முதல் நி லையங்களை திறந்து வை த்து கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங் கம் வேண்டுகோள்
அரியலூரில் இன்று நடக்கிறது திமுக 15வது ஒன்றிய தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
ெபரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விதை தரத்தை அறிந்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்: வேளாண்மை அலுவலர் வேண்டுகோள்
தா.பழூர் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
குண்டும், குழியுமான சாலை கரூரில் முதன்முறையாக துவக்கம்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்