கடலூர் அருகே பரபரப்பு கடலில் மிதந்து வந்த உருளை வடிவிலான மர்ம பொருள்
1/11/2022 4:49:23 AM
கடலூர், ஜன.11: கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த உருளை வடிவிலான மர்மப்பொருள் குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே உள்ள ராசாபேட்டை கடல் பகுதியில் 8 நாட்டிகல் மைல் தூரத்தில் அந்தப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சுமார் 5 அடி நீளமுள்ள பைபரால் ஆன உருளை வடிவ மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்தது. இதை பார்த்த மீனவர்கள், அந்த மிதவையை படகில் கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கடலூர் துறைமுக போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கப்பல் செல்ல வழிகாட்டியாக பயன்படும் உருளையாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த மிதவை குறித்து உறுதியான தகவல் ஏதும் தெரியவில்லை. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த உருளை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!