வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம்
1/11/2022 4:48:55 AM
குறிஞ்சிப்பாடி, ஜன. 11: வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம் வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் 151வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி வரும் 17ம் தேதி காலை 5 மணி அளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெறுகிறது. தொடர்ந்து 7.30 மணி அளவில் சன்மார்க்கக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.அதே நேரத்தில், மருதூர் வள்ளலார் சன்னதி, நற்கருங்குழி வள்ளலார் சன்னதி, மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் ஆகிய இடங்களிலும் செம்பக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள், 18ம் தேதி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7, 10 மணி, 19ம் தேதி அதிகாலை 5.30 மணி என ஆறு காலங்களில் 7 திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை கடலூர் இணை ஆணையர் அசோக் குமார் தலைமையில் உதவி ஆணையர் பரணிதரன், நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார், ஆய்வாளர் வசந்தம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கோடை விடுமுறை முடிந்து கடலூர் மாவட்டத்தில் 2,180 பள்ளிகள் திறப்பு
வீடு கட்டும் திட்டத்தில் அலைக்கழிப்பு ஆட்சியரிடம் ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மாற்றுத்திறனாளி தம்பதி
நடராஜர் கோயிலுக்கு சொந்தமான குளம், நிலங்களை மீட்க வேண்டும்
கருகும் பயிர்கள்: விவசாயிகள் வேதனை
பழுதான சாலையால் வாகனஓட்டிகள் அவதி
உடல்நலக் குறைவால் இறந்த குரங்கு இறுதிச்சடங்கு செய்த கிராம மக்கள்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்