வடலூர் நகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியீடு
1/11/2022 4:48:33 AM
குறிஞ்சிப்பாடி, ஜன. 11: வடலூர் நகராட்சி உள்ளாட்சி தேர்தலுக்கான, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை ஆணையாளர் குணாளன் வெளியிட்டார். தமிழக தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பேரூராட்சியாக இருந்து, கடந்தாண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட வடலூர் நகராட்சியில், கடந்த ஒரு வாரமாக வார்டுகளை மறுவரையறை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது.இதில், 18 வார்டுகள் 27 வார்டுகளாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, தமிழக தேர்தல் ஆணைய கால அட்டவணைப்படி, வடலூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான புகைப்படத்துடன் கூடிய, வரைவு வாக்காளர் பட்டியலை நகராட்சி ஆணையர் குணாளன் வெளியிட்டார். நிகழ்ச்சியில், நகரமைப்பு ஆய்வாளர் ஜின்னா, பொறியாளர் சிவசங்கர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு சத்து மாத்திரை சாப்பிட்ட 30 மாணவ, மாணவிகள் மயக்கம்
விழுப்புரம் அருகே நள்ளிரவு விபத்து: செங்கல்சூளையில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற கணவன், மனைவி பலி
குடிபோதையில் பெட்ரோல் பங்க்கை சூறையாடிய ஆசாமிகள்
கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 52 போலீசார் கூண்டோடு மாற்றம்
புதுச்சேரி, காரைக்காலில் மீன்பிடி தடைகாலம் இன்றுடன் நிறைவு
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!