தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
1/11/2022 4:43:38 AM
தூத்துக்குடி, ஜன.11: தூத்துக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழைக்காலம் முடிந்துள்ள நிலையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மழைக்கால தொற்றுநோய்களில் இருந்து பாதுகாத்திட ஏதுவாக அனைத்துப்பகுதிகளிலும் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம்களை நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தலின்பேரில், தூத்துக்குடி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜன் தலைமையில், உதவி இயக்குநர் ஆண்டனி இக்னேஷியஸ் சுரேஷ் மேற்பார்வையில் தூத்துக்குடி கோட்டத்திற்குட்பட்ட கால்நடை மருத்துவமனைகள் சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன்படி, இன்று (11ம் தேதி) மாப்பிள்ளையூரணி மருத்துவமனை சார்பில் தெற்கு சங்கரப்பேரியிலும், நாளை (12ம் தேதி) ஏரல் மருத்துவமனை சார்பில் கொற்கையிலும், 17ம் தேதி பேரூரணி மருத்துவமனை சார்பில் அல்லிகுளத்திலும், 18ம் தேதி ஏரல் மருத்துவமனை சார்பில் ஆறுமுகமங்கலத்திலும், 19ம் தேதி தெய்வச்செயல்புரம் மருத்துவமனை சார்பில் எல்லைநாயக்கன்பட்டியிலும், 20ம் தேதி கால்வாய் மருத்துவமனை சார்பில் வல்லக்குளத்திலும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடக்கிறது.
இம்மாதம் 21ம் தேதி செய்துங்கநல்லூர் மருத்துவமனை சார்பில் விட்டிலாபுரத்திலும், 25ம் தேதி மாப்பிள்ளையூரணி மருத்துவமனை சார்பில் கருப்பசாமி நகரிலும், 26ம் தேதி பேட்மாநகரம் மருத்துவமனை சார்பில் அணியாபரநல்லூரிலும், 27ம் தேதி முள்ளக்காடு மருத்துவமனை சார்பில் அத்திமரப்பட்டியிலும், 29ம் தேதி முடிவைத்தானேந்தல் மருத்துவமனை சார்பில் வர்த்தகரெட்டிபட்டியிலும் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில் சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்து வளர்ப்பவர்களுக்கு ஊக்கபரிசு வழங்கப்படுகிறது. முகாமில், விவசாயிகள், பொதுமக்கள் தங்களின் கால்நடைகளுடன் பங்கேற்று பயன்பெறுமாறு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜன், உதவி இயக்குநர் ஆண்டனி இன்னேஷியஸ் சுரேஷ் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் நியமனம்
பிள்ளையன்மனை பரமேறுதலின் ஆலயத்தில் அசன விழா
தூத்துக்குடியில் நாளை வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
தங்கம்மாள்புரம் கண்மாயில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு
உடன்குடி யூனியனில் ரூ.93.22 லட்சத்தில் சாலை பணிகள்
மெஞ்ஞானபுரத்தில் பேவர்பிளாக் சாலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!