3 மாத சம்பளம் வழங்கக்கோரி பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் விரைவில் தீர்வு காண்பதாக கலெக்டர் உறுதி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில்
1/11/2022 4:31:33 AM
வேலூர், ஜன.11: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 மாத ஊதியம் வழங்கக்கோரி பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் 3 நாட்களில் ஊதியம் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நான்கரை ஆண்டுகள் படிப்பு முடித்த மாணவர்கள் பயிற்சி டாக்டர்களாக அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ₹25 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. தங்களுக்கான ஊதியத்தை மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் சரிவர பதில் கிடைக்காததால் விரக்தியடைந்த பயிற்சி டாக்டர்கள் நேற்று காலை வார்டுகளுக்கு செல்லாமல் டீன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள் கூறுகையில், ‘கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோதும் சரியான பதில் இல்லை. கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க தொகையாக ₹15 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால் ₹7 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டது. இனி வரும் காலங்களில் மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும். எங்களுக்கு நிறுத்தி வைத்துள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்று கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’ என்றனர். இதையடுத்து நேற்று மாலை 6.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்துக்கு பயிற்சி டாக்டர்கள் வந்தனர். அங்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியனை சந்தித்து தங்களுக்கு 3 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்று கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், ‘3 நாட்களில் உங்கள் சம்பள பிரச்னைக்கு தீர்வு காணப்படும். நீங்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். இதை பயிற்சி மருத்துவர்கள் ஏற்று வழக்கம்போல் பணிக்கு திரும்புவதாக கூறி கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகள்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
ேவலூர் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு
திருவலம் பேரூராட்சியில் பணி நியமனம், வரிமேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் திமுகவினர் போட்டியின்றி தேர்வு
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
கூட்டுறவு வங்கி பேரவைக்கூட்டம் குடியாத்தத்தில்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் பேரணாம்பட்டு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில்
தேர்..டெடிபேர்..தாஜ்மஹால்..!!: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது..!!
திருவள்ளுவர்.. ஸ்பைடர் மேன்.. மயில்..!!: கொடைக்கானலில் மனதை கவரும் மலர் கண்காட்சி.. படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்..!!
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!