சிவகாசி சிவன் கோயில் முன்பு தொடரும் ஆக்கிரமிப்பு பக்தர்கள், வாகனஓட்டிகள் அவதி
1/9/2022 4:08:46 AM
சிவகாசி, ஜன. 9: சிவகாசி சிவன் கோயிலை சுற்றி தொடரும் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள், வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிவகாசியில் நகரின் மையத்திலுள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது. அறநிலைய துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கடடப்பட்டது. இக்கோயிலுக்குள் துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, முருகன், பைரவர், நவகிரகங்களும் நிறுவப்பட்டுள்ளதால் தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு அதிகம் வந்து செல்கின்றனர். பிரதோஷம் போன்ற விசேஷ தினங்களில் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியை சேர்ந்த பக்தர்களும் இக்கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
வடக்கு ரத வீதியில் கோயிலின் சுவரை ஒட்டி தள்ளுவண்டி பழக்கடைகள் அமைத்துள்ளனர். இதனால் பக்தர்கள் ரதவீதியை சுற்றி வர வழியின்றி அவதிப்படுகின்றனர். மேலும் தள்ளுவண்டி கடைகளால் வடக்கு ரதவீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகனஓட்டிகள் தினமும் சிரமப்படுகின்றனர். வடக்கு ரத வீதியில் மாநகராட்சி வணிக வளாகம் உள்ளது. இங்கு 10 க்கும் மேற்பட்ட பழக்கடைகள், ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் சிவகாசி மாநகராட்சி நிர்வாகத்திற்கு மாதந்தோறும் வாடகை செலுத்துகின்றனர்.
சிவன் கோயில் ரதவீதி பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை மீறி ஏராளமான நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி கடைகள் அமைத்து போக்குவரத்திற்கும், பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் அனுமதியின்றி அமைத்துள்ள தற்காலிக கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ராஜபாளையத்தில் காற்று மழையால் மரங்கள் சாய்ந்தன
ஆதார் சேவைகளுக்கு சிறப்பு முகாம்
பயிற்சியாளரே இல்லாமல் யோகாவில் தங்கம்,வெண்கலம் வென்ற சகோதரிகளுக்கு உற்சாக வரவேற்பு
ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
மஞ்சப் பை வழங்கல்
வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்க மையம் அமைக்க மானியம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!