கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 100 படுக்கை வசதியுடன் தனிவார்டு மதுரை அரசு மருத்துவமனை டீன் பேட்டி
1/9/2022 4:03:45 AM
மதுரை, ஜன. 9: கொரோனாவால் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க, 100 படுக்கைகளுடன் தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது என மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: மதுரையில் சமீப காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சிகிச்சைக்கான படுக்கை உள்ளிட்ட வசதிகள் தயார் நிலையில் உள்ளன. மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது 52 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, தனித்தனி மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டால், அவர்களுக்கும் சிகிச்சை அளிக்க 100 படுக்கைகளுடன் தனிவார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாது. கொரோனா தடுப்பூசி மட்டுமே பரவல், உயிரிழப்பை கட்டுப்படுத்தும். தகுதி உள்ள அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த வேண்டும். அப்போதுதான், 3வது அலையில் இருந்து தப்பிக்கலாம். இணை நோயால் பாதிக்கப்படாமல், 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை. அவர்களுக்கு பாதிப்பு வந்தாலும்கூட அது லேசான பாதிப்பாகவே இருக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
163 குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி
மேலும், அவர் கூறுகையில், ‘மதுரை அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பில் இதுவரை ரூ.10 கோடியே 72 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில், 163 குழந்தைகளுக்கு செயற்கை காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை அரசின் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. 163 குழந்தைகளும் பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாதவர்கள். இவர்கள் தற்போது மற்ற குழந்தைகளைப் போல் நலமுடன் உள்ளனர். குழந்தைகளுக்கு செயற்கை காது கேட்கும் கருவியை பொருத்திய காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து துறையினரையும் பாராட்டுகிறேன் என்றார்.
மேலும் செய்திகள்
நிலமோசடி செய்த தம்பதி மீது வழக்கு
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.14.83 லட்சம் மோசடி:3 பேர் மீது வழக்கு
பணி நிரந்தரம் கோரி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
2021ம் ஆண்டு தேர்வில் பல்கலை தரவரிசையில் இடம்பிடித்த எஸ்பிகே கல்லூரி மாணவ, மாணவியர்
கலசலிங்கம் பல்கலையில் பாதுகாப்பு
தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை மீட்பு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!