கங்கனாங்குளத்தில் சேரன்மகாதேவி ஒன்றிய பஞ். தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
1/9/2022 12:18:13 AM
வீரவநல்லூர்,ஜன.9: சேரன்மகாதேவி ஒன்றியத்துக்குட்பட்ட 12 பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் தேர்ந்தெடுக்கும் கூட்டம் கங்கனாங்குளத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சேரன்மகாதேவி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் முத்துபாண்டி பிரபு தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், உதவி திட்ட அலுவலர் மணவாளசங்கரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரகுமார், பொன்னுலெட்சுமி, மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சேரன்மகாதேவி ஒன்றியத்திற்குட்பட்ட 12 பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவராக திருவிருத்தான்புள்ளி பஞ்சாயத்து தலைவர் இளையபெருமாள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத்தலைவராக தெற்கு அரியநாயகிபுரம் பஞ்சாயத்து தலைவர் உஷா துரை, செயலாளராக வடக்கு காருகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளராக மூலச்சி பஞ்சாயத்து தலைவி சமுத்திரகனி குருநாதன், பொருளாளராக கரிசல்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஜெரால்டு மாணிக்கராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சேரன்மகாதேவி பணிமனை தொ.மு.ச. செயலாளர் கணேசன், நகர செயலாளர் மனிஷா செல்வராஜ், கரிசல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார டாக்டர் ரமேஷ், சுகாதார செயலாளர் முருகன், உதவி பொறியாளர் பாக்கியராஜ், ஒன்றிய இளைஞரணி சீவலமுத்து குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ராணி, கனகமணி, கிராம பஞ்சாயத்து தலைவர்கள் உலகன்குளம் மோகன், கூனியூர் முத்துகிருஷ்ணன், மலையான்குளம் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் நியமனம்
பிள்ளையன்மனை பரமேறுதலின் ஆலயத்தில் அசன விழா
தூத்துக்குடியில் நாளை வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
தங்கம்மாள்புரம் கண்மாயில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு
உடன்குடி யூனியனில் ரூ.93.22 லட்சத்தில் சாலை பணிகள்
மெஞ்ஞானபுரத்தில் பேவர்பிளாக் சாலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!