SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவில்பட்டி யூனியனில் மேலும் மூவருக்கு கொரோனா

1/9/2022 12:17:51 AM

கோவில்பட்டி, ஜன. 9: தற்காலிக  பெண் ஊழியருக்கு கொரோனா பரவியதை அடுத்து கோவில்பட்டி யூனியன்  அலுவலகத்தில் நேற்று 46 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் மூவருக்கு தொற்று உறுதியானது. கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் கம்ப்யூட்டர்  பிரிவில் வேலை பார்க்கும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டதையடுத்து அவர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து  கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள்  உள்ளிட்ட 46 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டாக்டர்  மனோஜ் தலைமையிலான குழுவினர் யூனியன் அலுவலகத்திற்கு வருகை தந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியானது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sri_langa

    மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்

  • sydney-snow-27

    மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!

  • modistaaa

    ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!

  • peru_Clowns Day

    பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

  • yercaussss

    ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்