கோவில்பட்டி ஜிஹெச்சில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆய்வு
1/9/2022 12:17:46 AM
கோவில்பட்டி, ஜன. 9: கோவில்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலை அமைப்பது குறித்து கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் உள் மற்றும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாலைகள் மேடு, பள்ளமாக உள்ளதால் நோயாளிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சரான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலை அமைக்க வேண்டிய இடங்களை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவமனை வளாகத்தில் பேவர் பிளாக் அல்லது சிமென்ட் சாலை அமைத்து தரப்படும் என்றார்.
தொடர்ந்து அவர், கொரோனா தடுப்பூசி நடைபெறும் சிறப்பு முகாமினையும் பார்வையிட்டார்.ஆய்வின் போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், துணை சேர்மன் பழனிசாமி, ஜெ. பேரவை நகரச் செயலாளர் ஆபிராம் அய்யாத்துரை, ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தலைவர் தாமோதரன், ஓட்டப்பிடாரம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் போடுசாமி, வக்கீல் சங்கர்கணேஷ், வக்கீல் பிரிவு மாவட்டச் செயலாளர் சிவபெருமாள், பேச்சாளர் பெருமாள்சாமி, ஒன்றியச் செயலாளர் அன்புராஜ், மாணவரணி நகர துணைத்தலைவர் செல்வகுமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பாலமுருகன், ஜெமினி, கமலாரவிச்சந்திரன் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் நியமனம்
பிள்ளையன்மனை பரமேறுதலின் ஆலயத்தில் அசன விழா
தூத்துக்குடியில் நாளை வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
தங்கம்மாள்புரம் கண்மாயில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு
உடன்குடி யூனியனில் ரூ.93.22 லட்சத்தில் சாலை பணிகள்
மெஞ்ஞானபுரத்தில் பேவர்பிளாக் சாலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!