விளாத்திகுளத்தில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான சிறப்பு முகாம்
1/9/2022 12:17:41 AM
விளாத்திகுளம், ஜன. 9: விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த இம்முகாமுக்கு தாசில்தார் விமலா தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான திருநங்கைகள் ஆர்வத்துடன் பங்கேற்ற நிலையில் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த ஹரிணி என்ற திருநங்கைக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையை தாசில்தார் விமலா வழங்கிப் பேசினார். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சுயஉதவிக் குழு துவங்க வேண்டும். நலவாரிய அட்டை கிடைப்பதை எளிதாக்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போது இதுதொடர்பாக பரிசீலிப்பதாக அதிகாரிகள் முகாமில் தெரிவித்தனர். மேலும் இதுவரை விளாத்திகுளம் தாலுகாவில் மொத்தம் 13 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினர். முகாமில் குடிமைப்பொருள் வட்ட பொறியாளர் கணேஷ் குமார், புஷ்பராஜ், அழகுமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் நியமனம்
பிள்ளையன்மனை பரமேறுதலின் ஆலயத்தில் அசன விழா
தூத்துக்குடியில் நாளை வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
தங்கம்மாள்புரம் கண்மாயில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு
உடன்குடி யூனியனில் ரூ.93.22 லட்சத்தில் சாலை பணிகள்
மெஞ்ஞானபுரத்தில் பேவர்பிளாக் சாலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!