கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
1/9/2022 12:13:25 AM
பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதியில் தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கும் அரிசியை, சிலர் குறைந்த விலைக்கு வாங்கி, அதை பதுக்கி வைத்து ஆந்திராவுக்கு கடத்துவதாக திருவள்ளூர் எஸ்பி வருண்குமாருக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின்படி, திருத்தணி டிஎஸ்பி சாய்பிரினித் தலைமையில், உதவி ஆய்வாளர் ராக்கி குமாரி, பொதட்டூர்பேட்டை அடுத்த எஸ்கேஆர் பேட்டையில் தீவிர சோதனை நடத்தினார்.
அப்போது, அங்குள்ள கோழிப்பண்ணையில், ஏராளமான மூட்டைகளாகவும், கோபுரம் போல் குவித்து வைத்திருந்ததையும் கண்டு பிடித்தனர். அவை, ரேஷன் அரிசி என தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்து சுமார் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கோழிப்பண்ணை உரிமையாளர் கோவிந்தராஜ் என்வபவரது நண்பரிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் நூலகம்
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
புறநகர் மின்சார ரயில்களில் கைவரிசை: செல்போன் திருடிய 2 பேர் பிடிபட்டனர்
புதர்மண்டி பயன்பாடில்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமான திருவாலங்காடு உழவர் சந்தை
பொன்னேரி அருகே ரூ.80 லட்சம் மதிப்பு அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் அதிரடி
செங்குன்றத்தில் பயங்கரம்: முன்விரோத தகராறில் ரவுடி வெட்டி கொலை: 2 பேர் கைது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!