வேலூர் மாவட்டத்தில் 12 தாசில்தார்கள் மாற்றம் கலெக்டர் உத்தரவு
1/8/2022 7:34:08 AM
வேலூர், ஜன.8: வேலூர் மாவட்டத்தில் 12 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் 12 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: அணைக்கட்டு தாசில்தார் பழனி, கலெக்டர் அலுவலக மேலாளர் (நிதியியல்) பணியிடத்திற்கும், கே.வி.குப்பம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் விநாயகமூர்த்தி அணைக்கட்டு தாசில்தாராகவும், வேலூர் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலக தனி தாசில்தார் ரமேஷ், கே.வி.குப்பம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், வேலூர் ஆர்டிஓ நேர்முக உதவியாளராக பணியாற்றி மருத்துவ விடுப்பில் இருந்த வச்சலா, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலக தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முத்திரைக்கட்டண பிரிவு துணை தாசில்தார் சித்ராதேவிக்கு, தற்காலிக பதவி உயர்வு அளித்து கலெக்டர் அலுவலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நிலஎடுப்பு தனி தாசில்தாராகவும், பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் கலைவாணிக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்து குடியாத்தம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராகவும், தமிழ்நாடு கேபிள் டிவி தனி தாசில்தார் சுமதி கலெக்டர் அலுவலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சிறப்பு நில எடுப்பு தனி தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக மேலாளர் (நீதியியல்) பத்மநாபன் கேபிள் டிவி தனி தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக தனி தாசில்தார் (அகதிகள் பிரிவு) பாலமுருகன் முத்திரை கட்டண தனி தாசில்தாராகவும், பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் சுஜாதா (அகதிகள் பிரிவு) தனி தாசில்தாராகவும், முத்திரை கட்டண தனி தாசில்தார் சச்சிதானந்தம், தேர்தல் பிரிவு தனி தாசில்தாராகவும், தேர்தல் பிரிவு தாசில்தார் ராம் பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
ேவலூர் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு
திருவலம் பேரூராட்சியில் பணி நியமனம், வரிமேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் திமுகவினர் போட்டியின்றி தேர்வு
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
கூட்டுறவு வங்கி பேரவைக்கூட்டம் குடியாத்தத்தில்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் பேரணாம்பட்டு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!