வெள்ளகோவில் உதவி தோட்டக்கலை அலுவலர் விஷம் குடித்து தற்கொலை
1/8/2022 7:05:55 AM
திருப்பூர், ஜன. 8: திருமணமான 7 மாதத்தில் உதவி தோட்டக்கலை அலுவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமாக என போலீசார் விசாரித்து வருகின்றனர். வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (29). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் டி.ஆர்.நகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வெள்ளகோவில் தோட்டக் கலை அலுவலகத்தில் உதவி தோட்டக்கலை அலுவலராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், நேற்று லோகேஷ் வெள்ளகோவில் அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் வெள்ளகோவில் தோட்டக்கலை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் அலுவலகத்தில் உள்ளவர்கள் அங்கு வந்து லோகேசை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் லோகேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து லோகேஷின் மனைவி சுகந்தி (20) வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவர் கடந்த 2 நாட்களாக பணி சுமையில் இருந்ததாகவும் அதனால் இறந்திருக்கலாம் என்று புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
திருப்பூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தேர்தல்
சாலையோரம் குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் உடுமலை நகராட்சி தலைவர் எச்சரிக்கை
பாடப்புத்தகங்கள் விநியோகம் மஞ்சி குடோனில் தீ விபத்து
பரணி, கார்த்திகை மேளதாளத்துடன் வழியனுப்பி வைத்தனர்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!