ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நிலம் வாங்க மானியம்
1/8/2022 7:05:24 AM
திருப்பூர், ஜன. 8: திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிலம் வாங்குவதற்கும் மற்றும் நிலத்தை மேம்படுத்துவதற்கும் வங்கியுடன் இணைந்து மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டு வருகிறது. நிலம் வாங்கும் திட்டத்தில் விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மகளிராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமலும், 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். நிலம் வாங்கும் திட்டத்தில் அதிகபட்சமாக இருக்க வேண்டும். நிலம் வாங்கும் திட்டத்தில் அதிகபட்சமாக நஞ்சை 2.50 ஏக்கர் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவரிடமிருந்து நிலம் வாங்க வேண்டும். இத்திட்டத்தில் பத்திரப்பதிவு கட்டணத்தை அரசு தள்ளுபடி செய்துள்ளது.
நிலம் வாங்கும் மொத்த முதலீட்டில் 30 சதவீதம் (ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வரை) மானிய தொகையும், மீதி தொகையை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும். நில மேம்பாட்டு திட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நில வளத்தை மேம்படுத்துதல், ஆழ்குழாய் கிணறு அல்லது திறந்தவெளி கிணறு அமைத்தல், பம்புசெட் கொட்டகை அமைத்தல் போன்றவற்றிற்காக மொத்த முதலீட்டில் 30 சதவீதம் (ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வரை) மானியமாகவும், மீதி வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகம் அறை எண் 503, தாட்கோ அலுவலக மேலாளரிடம் 0421-2971112 என்ற என்ற எண்ணில் தொடர்புகொண்டு கேட்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
திருப்பூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தேர்தல்
சாலையோரம் குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் உடுமலை நகராட்சி தலைவர் எச்சரிக்கை
பாடப்புத்தகங்கள் விநியோகம் மஞ்சி குடோனில் தீ விபத்து
பரணி, கார்த்திகை மேளதாளத்துடன் வழியனுப்பி வைத்தனர்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்