உடுமலை அருகே விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்திய யானை கூட்டம்
1/8/2022 7:05:03 AM
உடுமலை, ஜன. 8: விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானைக் கூட்டத்தை வனத்துறையினர் வனத்திற்குள் விரட்டியடித்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சின்னக்குமாரபாளையம் பகுதியை ஒட்டி கடந்த சில நாட்களாக 2 குட்டிகளுடன் யானைக்கூட்டம் ஒன்று முகாமிட்டிருந்தன. அவை அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து சப்போட்டா, தென்னை உள்ளிட்ட பயிர்களை மிதித்தும் தின்றும் சேதப்படுத்தின. விவசாயிகள் மூலம் இத்தகவலறிந்த உடுமலை வனச்சரக அலுவலர் தனபால் தலைமையில் வனவர் சுப்பையா உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவயிடம் விரைந்து வந்து யானைக் கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்டினர். ஏழுமலையான் கோயிலை ஒட்டிய வனப்பகுதி வரை யானைக் கூட்டத்தை பின் தொடர்ந்து சென்று வனப்பகுதிக்குள் விரட்டினர்.இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
அதேநேரத்தில் வன விலங்குகளால் சேதம் ஏற்படாமல் தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதன்படி வன எல்லையிலுள்ள அகழிகளை முறையாக பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகள்
மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
திருப்பூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தேர்தல்
சாலையோரம் குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் உடுமலை நகராட்சி தலைவர் எச்சரிக்கை
பாடப்புத்தகங்கள் விநியோகம் மஞ்சி குடோனில் தீ விபத்து
பரணி, கார்த்திகை மேளதாளத்துடன் வழியனுப்பி வைத்தனர்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!