தமிழக அரசு கேட்ட மழை வெள்ள நிவாரண தொகை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
1/8/2022 12:51:17 AM
தஞ்சை, ஜன.8: கடும் மழை வெள்ளப்பாதிப்புக்கு தமிழக அரசு கோரி உள்ள நிவாரண நிதியை உடனே ஒன்றிய அரசு வழங்க கோரியும் குறுவை அறுவடை செய்யும் நிலையில் மழை நீரில் மூழ்கி அழிந்து போனதற்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிடவும் நெல், நிலக்கடலை, கேழ்வரகு, மரவள்ளி, உளுந்து, வாழை, கரும்பு, காராமணி, வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை, மற்றும் காய்கறி ஆகிய மானாவாரி தோட்டக்கலைப்பயிர்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவும் மழை வெள்ள பாதிப்பால் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும், மழை வெள்ள பாதிப்பு மற்றும் கோமாரி மர்ம நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்து போன கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் வேலைவாய்ப்பு வருமானத்தை இழந்து உள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண வழங்கிடவும், அம்மாபேட்டை பகுதியில் கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்து பயிர் காப்பீடு தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் அம்மாபேட்டை நால் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் சாமு. தர்மராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாலு, நகர செயலாளர் ராஜாராமன், ஒன்றிய நிர்வாகிகள் பழனிச்சாமி. செல்வம், காமாட்சி, சாந்தி, திருநாவுக்கரசு, சத்தியசீலன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஐம்பொன்சிலைகள் ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி
8வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் முகமது இப்ராஹிம் சுல்தானா வேட்பு மனு தாக்கல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு
இன்று நடக்கிறது சொத்து முன்விரோத தகராறு: பெரியப்பா கல்லால் குத்திக் கொலை
விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்: கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி: 142 மனுக்கள் பெறப்பட்டது
பாபநாசம் அரசு பெண்கள் பள்ளியில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நீதிபதி பாராட்டு
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!