SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரத்திலிருந்து தவறி விழுந்து இறக்கும் பனைத்தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்

1/8/2022 12:37:39 AM

தூத்துக்குடி, ஜன.8:  தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. தென்காசி மாவட்ட தலைவர் குருசாமி பாண்டியன் தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட தலைவர் அற்புத நவரத்தினம், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ராமர் முன்னிலை வகித்தனர். சங்க ஒருங்கினைப்பாளர் அருட்தந்தை செல்வஜார்ஜ்  வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாட்டின் மரமாக பனை மரத்தை அறிவித்து, பனை மரத்தை வெட்டுவதற்கு தடை விதித்தும், பனைகளை வளர்க்க, பராமரிக்க ஆண்டு திட்டத்தில் பணம் ஒதுக்கியதற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது, பதனீர் இறக்கும் காலம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆகும். மீதமுள்ள 6 மாதத்திற்கு பனைத்தொழில் செய்பவர்கள் பிற தொழிலை செய்ய முடியாது.

எனவே அந்த 6 மாதத்திற்கு குடும்ப வாழ்வாதாரத்திற்கு மீனவர்கள், உப்பள தொழிலாளர்களுக்கு வழங்குவதுபோல் நிவாரண உதவி வழங்க வேண்டும். பனைத்தொழிலில் ஈடுபடும் போது தவறி கீழே விழுந்து இறக்க நேரிட்டாலோ, உடல் ஊனமுற்றாலோ அரசு அந்த குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், பனைமரம் ஏற மின்தூக்கி ஏணிக்கு மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில பொருளாளர் ஹரிபாகரன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் கிறிஸ்டோபர், செயலாளர் பால்ராஜ், மாவட்ட பொருளாளர் டேவிட் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராயப்பன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sri_langa

    மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்

  • sydney-snow-27

    மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!

  • modistaaa

    ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!

  • peru_Clowns Day

    பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

  • yercaussss

    ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்